பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய சொல் சொல்க!

அன்பு கலந்தது:

வஞ்சம் இழந்தது.

"தந்தையே, நேற்று இரவு இரு விருந்தினரைப் போற்றும் பேறு பெற்ருேம். விருந்தினர் இருவரும் அறிவு சான்றவர்கள் : அறம் அறிந்தவர்கள். ஒருவர் முன்னர் அறிமுகம் ஆனவர் ; மற்றவர் புதியவர். அவர் களைப் போற்றிய மகிழ்ச்சியும், அவர்களோடு அளவளா விப் பேசிய மகிழ்ச்சியும் எங்களைப் பூரிக்கச் செய்தன. அவர்கள் அன்புமிகப் பேசினர். இளிய சொல் சொல் லினர். நேற்று எங்களுக்கு இனிய நாள்.'

மகனே - மகளே, நீங்களும் இனியவர்களே. ஆலுைம், சொல்லியபடி செய்யாதவர்கள்.'

தவறு இருந்தால் பொறுக்கவேண்டும் தந் தையே !'

இனிய சொல்லைக் கற்க வருவதாக நேற்றுச் சொல்லிச் சென்ற நீங்கள் இன்று கற்றுக்கொண்டே வந்துள்ளீர்களே! இது சொல்லியபடி செய்தது ஆகுமா?! -என்று கூறிச் சிரித்தார் தந்தை. இருவரும் சிரிப்பில்

கலநதனா.