பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 109

ខ្ញុំ ' தந்தையே, கற்கவில்லை ; கேட்டு வந்தோம்

எதைக் கற்க வேண்டுமானலும் அதற்கு இந்த இடம் அன்றி வேறு எந்த இடமும் தகுதி உடையது ஆகாதே!

ሯ மக்களே, நீங்கள் இன்சொல்லைக் கற்க வேண்டிய வர்களும் அல்லர். இயல்பாகவே இனியசொல் அமை யப் பெற்றவர்கள். அன்பு கொண்டு இணைந்துள்ள உங்களிடம் இன்சொல் அமையாது போகுமோ? கண்ணு, நீ கண்ணம்மாவுக்கு இனிமையைத் தரும் சொல்லேச் சொல்பவன். கண்ணம்மா உனக்கு இனிமை யைத் தரும் சொல்லைச் சொல்பவள். இவ்வாறு, கேட் பவருக்கு இனிமையைத் தரும் சொல்லே இன்சொல். இந்த இன் சொல்லைப்பற்றி நீங்கள் அறிய விரும்புகின்ற வற்றைக் கேட்க ! r

கண்ணன் தந்தையே, இன் சொல் எத்தகையது?

தந்தை இல்லறத்திற்கு உரிய செம்மையான பொருள்களே உணர்ந்தவர்களது வாயிலிருந்து வரும் சொற்கள் அன்பு கலந்தன. கலந்து வஞ்சம் அற்றனவா கும். அவையே இன்சொற்கள் ஆகும். இல்லறத்திற்கு உரிய செம்மையான பொருள் என்பது கணவனும் மனைவியும் உள்ளம் ஒத்துக் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைக் கருத்துக்கள். அக் கருத்துக்களைப் பொறுப் போடு வெளியிடல் வேண்டும் ; கடைப்பிடிக்கவேண்டும். அவற்றிற்கு அன்பு வேண்டும்; வஞ்சம் கூடாது. ஆகவே அன்பு கலந்தும், வஞ்சம் இன்றியும் பேச அமைவது இன் சொல்.

--- مباہمی یہ مہمہم پہ ممب۔مس;

இன்சொலால், ஈரம் அளஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.