பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வள்ளுவர் வாழ்த்து

அணிகலன்களை இன் சொல் தருமா -என்று பெண்கள் கேட்டாலும் கேட்பர். -

தந்தை பெண்களுக்கு மட்டுமன்று இன் சொல் ஆண்களுக்கும் அணியைத் தரும். அதற்கு, தன்னிடம் பணிவு காட்டுபவனிடத்தும் தான் பணிவு உடையவன் ஆகவேண்டும். அந்தப் பணிவை உடையவனாய் இனிய சொல்லைச் சொல்பவருக அமைதல் ஒருவனுக்கு உண்மை அணி ஆகும். உடலில் அணியும் பிற அணிகள் உண்மை அணிகள் ஆகா. மக்காள், அழகைத் தருவதுதானே அணி இன் சொல் என்னும் அணியை அணிந்தவன் பல வகை அழகைப் பெற்றவன் ஆவான். உடல் அணிகள் பார்வைக்கு மட்டுமே அழகைத் தருவன. பணிவோடு நின்று இனிய சொல்லைச் சொல்லும்போது அவ்வாறு சொல்பவன் பார்வைக்கு அழகாகப்படுவான். இனிய சொல் காதால் கேட்பதற்கு அழகாகப்படும். அதனுல் மகிழும் உள்ளத்தின் உணர்ச்சிக்கும் அழகாகப்படும், பின்னுெரு கால் நினைத்துப் பார்க்கும் நினைப்பிற்கும் இன் சொல் அழகாகப்படும். இவ்வாறு பணிவொடு கூடிய இன் சொல் பல வகை அழகைப் பெறுவதால் நிலத்த அழகைப் பெற்ற அணியாகும்.

கண்ணம்மா . (கண்ணனைப் பார்த்தவாறே) இன் சொல் பணிவோடு இணைந்து அமைவதால் பொன்னில் பதித்த வைர அணியாய் மிளிரும். ஆண்களும் அடகு வைக்க முடியாமல் அணியலாம்.

கண்ணம்மாவின் நயமுள்ள குறும்பு நிறைந்த பதி கலக் கண்டு தந்தையும் மகிழ்ந்தார். கண்ணன் என்ன

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS SAAAAAA AAASMSMMAAASAAAAS AAASASASSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS

  • பணிவுடையன் இன்சொலன் ஆதல், ஒருவற்

கணி அல்ல மற்றுப் பிற. -