பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து - 115,

தந்தை : அவர்களைப்பற்றி என்ன சொல்வது ? பிறர் இனிய சொல் சொல்லும்போது கேட்பவருக்கு இன்பமாக இருக்கும். பிறர் கூறும் இனியசொல் தனக்கு இன்பத்தைக் கொடுப்பதைக் கண்டு மகிழ்பவன் தான் மட்டும் பிறரிடம் கடுஞ்சொல்லை வழங்குவது ஏனே அவ னைப் பற்றி என்ன கூறுவது? வேண்டுமானல் ஓர் உவமை கூறுவேன் :

சுவைமிக்க கனி ஒன்றை ஒருவன் தன் கையில் வைத்திருக்கிருன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் அதை உண்ணும் உரிமை கொண்டவன். ஆனல் அவன் அதை உண்ணுமல் காயை உண்பானே ? அதி லும் மற்றவர்க்கு உரிய மரத்துக் காயை அவர் அறியா மல் பறித்து உண்பான ? -

கண்ணன் : எந்த அறிவற்றவனும் உண்ண மாட்டான்.

தந்தை : கடுஞ் சொல்லைக் கூறுபவன் அவ்வாறு உண்பவன்தான். 'இனிய சொற்கள் தன்னிடம் கிறைங் திருக்கவும் அவற்றைவிட்டுக் கடுஞ்சொற்களைக் கூறுதல், சுவைமிக்க கனி இருக்க அதைவிட்டுச் சுவையற்ற காயைக் கவர்ந்து உண்ணுவதைப் போன்றதாகும். கடுஞ் சொற் களைச் சொல்பவன் காயைக் கவர்ந்து உண்ணும் கள் வனே.

கண்ணம்மா : இன்சொல் கனிபோன்று சுவை உடையதே. கடுஞ்சொல்லும் காய் போன்றதே.

  • இன்செல் இனிதன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது ! * இனிய உளவாக இன்னத கூறல்,

கணியிருப்பக் காய்கவர்ந் தற்று.