பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 119

நீரையும், ஊற்று நீரையும், மழை நீரையும் பெற்றுக் கொள்வது. இவ்வாறு கைம்மாறு பெறும் கடல் கைம் மாறு நோக்காத உதவிக்குமுன் பெரியதாகுமா ?

தினையரிசி பனம்பழம் ஆகும்

இவ்வாறு, உதவிகள் மதிக்கப்படுதல் உதவி பெறு பவரின் தன்மையையும் பொறுத்தது ஆகும். உதவி பெறுபவர் உதவியின் பயனை ஆராய்ந்து பார்த்துத் தெரி பவர் ஆகவேண்டும். அவ்வாறு பயன் தெரிபவர் தான் உதவியைத் தக்கபடி மதிப்பிடுவர். பிறர் தினை என் னும் தானியத்தின் அளவு சிறிய உதவியைச் செய்ய லாம். செய்தாலும் அது தந்த பயனை ஆராய்ந்து அறிக் தவர் அதனைப் பனம்பழம் அளவு பெரிதாக மதிப்பிடுவர், தினை மிகச் சிறியதுதான். எவ்வளவு தினைகளின் அளவு சேர்த்தால் ஒரு பனம்பழத்தின் அளவு அமை யும் ? அத்துணை மடங்கு எல்லையில்லாத பெரியதாகப் பயன் தெரிபவரால் மதிக்கப்படும்.

மக்களே, பிறர் செய்த உதவிக்கு மாற்று உதவியா கப் பொருள்களை உதவ நேரலாம். அவ்வுதவியும் பயன் தெரிந்தவரின் தன்மையைப் பொறுத்தே அமைவ தாம். அஃதன் றி, கைம்மாருகச் செய்யப்படும் உதவி பெற்றுக் கொண்ட உதவியின் அளவை உடையது அன்று. உதவியைப் பெற்றுக்கொண்டவரது பெருந்தன்மையின்

~ தினத்துணை கன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். - * உதவி வரைத்தன்றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.