பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவு நிலை கொள்க!

செல்வத்தை உடனே கைவிடுக!

" தந்தையே, நேற்றிரவு முதல் ஒரு எண்ணம் என் உள்ளத்தைக் கவ்விக்கொண்டுள்ளது. என் தாத்தா தனக்கு உதவி செய்த ஒரு நண்பரைப் பற்றி அடிக்கடி பெருமையாகக் கூறுவார். அவரைக் காணும்போதெல் லாம் அன்போடு போற்றுவார். அவரால் மேலும் பேருதவியைப் பெற இருப்பதாகக் கூறுவார். என் தாத்தா, ஊர் நாட்டாண்மைக்கார்ர் ஆகையால் அந்த நண்பரைப் பற்றிய வழக்கு ஒன்று தாத்தாவிடம் வந் தது. உதவிய நண்பர்க்குத் தாத்தா நன்றிகாட்ட நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதுஎன்று நாங்கள் பேசிக்கொண் டோம். ஆனல் அவர் சொன்ன வழக்கு முடிவோ அந்த நண்பர்க்குத் தோல்வியாக அமைந்தது. தாத்தா இவ் வாறு செய்நன்றியைக் கொல்லலாமா என்ற எண்ணம் இன்னும் என்னைவிட்டு நீங்கவில்லை -என்ருன் கண்

成孪5°,

மகனே, தாத்தா நண்பர் பக்கம் தவறு கண் டிருப்பார்.' -

"இயல்பாகவே அவர் பக்கம் சிறு தவறுதான் நேர்ந் திருந்தது. இருந்தாலும் செய்நன்றி என்ன ஆவது ?"