பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - வள்ளுவர் வாழ்த்து

மனிதத் துலாக்கோல்

ஆம். நடுவுநிலையை அறிதல் வேண்டும். அறிக! மகனே, பொருள்களைச் சமமாக அளவிடும் கருவியை

அறிவாயே!” - . - ஆம். தந்தையே! 'தராசு ' என்று வழங்கப் படும் துலாக்கோல் அந்தக் கருவி.' 2.

அது நடுவுநிலைக்குச் சரியான எடுத்துக்காட்டா கும். துலாக்கோல் முதலில் தான் சமநிலையில் நிற்கும். நடுவுநிலை பெற்ற சான்ருேரும் தம் உள்ளத்தை முதலில் சமநிலையில் நிறுத்துவர். அந்தக் கோல் தன் இரு பக்கத்தே பொருத்தப்பட்டிருக்கும் தட்டுக்களைத் தாங்கு வது. தகுதி உடையவரும் இரு பகுதியினரின் பொறுப் பையும் ஏற்பவர். ஒரு தட்டில் பொன்னையும், மறு தட் டில் அதே நிறையுள்ள மண்ணையும் வைத்தால் பொன் சிறந்ததாயிற்றே என்று அதன் பக்கம் கோல் சாயாது. அல்லது மண்ணுயிற்றே என்று இரக்கப்பட்டு அதன் பக்கம் சாயாது. படிக்கல் தன் இனத்தைச் சேர்ந்த இரும்பு ஆயிற்றே என்று அதன் பக்கம் சாயுமோ ? நடுவுநிலைமை என்னும் செப்பம் உடையவரும் உயர்ந் தவர், தாழ்ந்தவர் என்று அன்பாலோ, அருளாலோ அவரவருக்குப் பரிந்துபோக மாட்டார். தனக்கு வேண் டிய உறவினர் என்று கருதார். *தான் முன்னர் சமமாக அமைந்து பின்னர் தன்பால் வைக்கப்படும் பொருள்களின் அளவை உள்ளபடி வரையறுத்துக்காட்டுவது துலாக்கோல். அதுபோல் நடுவுநிலைமையில் அமைந்து ஒரு பக்கம் உள்ளம் கோளுமை சான்றேர்க்கு அழகாகும். இது உள்ளத்தில்

'::*:cs:S::>:s:
  • சமன்செய்து சீர்துக்கும் கோல்போல், அமைந்தொருபால்

கோடாமை சான்ருேர்க் கணி.