பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கம் கொள்க!

உயிருக்கு அமைந்த

உயர் செல்வம்

மகனே, எதை இடுப்பிலே அவ்வாறு இறுகச் செருகுகிருய் ? - . . . .

' பெட்டித் திறவுகோல் தந்தையே '

திறவுகோலைக் காப்பாற்றும் பொறுப்பை நோக்கி குல் பெட்டியில் வைத்துக் காக்கும் பொருளின் அளவு பெரிதாகப் படுகிறதே !

தந்தையே, எங்கள் குடும்பத்தின் பொன்னும் பொருளுமாகிய ஓரளவு செல்வந்தான் உண்டு.'

செல்வத்தைக் காக்க வேண்டியதுதான். பொருள் இல்லையேல் இல்லற வாழ்வே நடவாதுதான். ஆயினும் அஃதோடு காக்கப்பட வேண்டியவையும் உண்டு. ஏனெ. னில் பொன்னும் பொருளுமாகிய செல்வத்தைக் கொண்டு உடலை அழகு படுத்தலாம் ; உறுதிப்படுத்தி வளப்படுத்தலாம். வளம் பெற்ற உடல் மூலம் ஓரளவு உயிரையும் காக்கலாம். ஆல்ை, உடலைப் போலவே, உயிரை வளப்படுத்தும் செல்வங்களும் உண்டு. அவற். 1ள் ஒன்று அடக்கம் உடைமை என்னும் செல்வம்.