பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? வள்ளுவர் வாழ்த்து

ஆமை அறிந்த அறிவு

மக்காள், ஆமையைப் பார்த்திருப்பீர்களே அது உறுதியான ஓட்டை உடையது. நான்கு கால்களையும் தலையையும் வேண்டும்போது மட்டும் வெளியே நீட்டிப் பயன் கொள்ளும். பிற நேரங்களில் உள்ளே அடக்கிக் கொள்ளும். மேலே உறுதியான ஒடு இருக்கிறதே என்று எப்பொழுதும் வெளியே நீட்டிக்கொண்டே இருப்பதில்லை. தனக்கு இடையூறு நேரும் என்பதை அறிந்து ஓர் ஒட்டுக்குள் ஐந்தையும் அடக்கிக் கொள் ளும். அடக்கிளுல்தான் அது பெற்றுள்ள ஒட்டின் வலிமை அதற்குப் பாதுகாவலாக அமையும். அந்த *ஆமைபோல் ஒருவன் தன் ஐந்து பொறிகளின் அவாவை யும் மனஉணர்வு என்னும் ஒரு மைக்குள் அடக்கிக் கொள் ளும் வல்லமையைப் பெறவேண்டும். பெற்ருல் அந்த வன்மை ஒரு வகையில் மட்டுமன்று, ஏழு வகையிலும் அவ லுக்குப் பாதுகாவலாக அமையும். அந்தப் பாதுகாவலால் இடையூறு நீங்கப்பெற்று வாழ்வின் உயர்ச்சியைப் பெறலாம்.

மலேயினும் உயர்ந்தது

மக்காள், வாழ்வின் உயர்ச்சி என்ருல் எத்துணை உயர்வென்று கருதுகிறீர்கள் மகனே, தோற்றத்தில் மிக உயர்ச்சியாக எதைச் சொல்வாய் ?!

" மிக உயர்ச்சியாகத் தோற்றமளிப்பது மலை தந்தையே !”

எழுமையும் ஏமாப் புடைத்து.