பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வள்ளுவர் வாழ்த்து

பேச்சடக்கமே நாவடக்கம் எனலாம். நாவை அடக்கா மல் பேசிளுல் எத்துண்ை தீமைகள் நேரும் என்பதை அறிந்தால் நாவடக்கத்தின் இன்றியமையாமை வெளிப் படும். ஆகவே, நாவடக்கத்தை எதிர்மறை வழியாக அறிவதே நலம். ஐவகைப் புலன்களையும் ஆருவது அறி வால் அடக்க வேண்டுமென்று கண்டோம். அவ்வாறு *காக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் காக்க வலிம்ை அற்றவரானலும் நாவையேனும் தீய சொல் சொல்லாமல் காக்கவேண்டும். காவாது போனல் சொற்குற்றத்திற்கு ஆளாகித் துன்பம் அடைவர். நாவை அடக்காது அதன் போக்கில் பேசவிட்டால் நல்ல சொற்களையும் சொல். லும் , தீய சொற்களையும் சொல்லும். நல்ல சொற்கள் நன்மையை விளைவிக்க, தீய சொற்கள் தீமைகளையே. பெருக்கும். எத்துணை நல்ல சொற்களைச் சொல்லி எத் துணை நன்மைகளை உண்டாக்கினல்தான் என்ன ? *தீய சொல்லால் அது தரும் தீய பொருளினது பயன் உண்டாகுமானுல் பிற ஒன்ருலும் நன்மை உண்டாகாமல் போகும். தீச்சொல் அத்துணைக் கொடியது.

மக்காள், தீய பயனைத் தரும் சொல்லைத் தீச்சொல் என்ற சொல்லால் குறித்தோம். அச்சொல்லை நோக் குக ! தீச்சொல் என்பதைத் தீ போன்ற சொல் என்றும்

கூறலாம். ஆம், தீய சொல் தீ போன்றதே. ஆளுல் *தீயினல் சுட்ட புண் உள்ளே ஆறிப் போகும். வெளியே

SAASAASAASAASAASAASAASAASAAeAAASAAAA :ుషి: ~ہندسہ،ہمہ سہمتص سب مہم۔م۔مام -

  • யாகாவா ராயினும் காகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. * ஒன்ருனும் தீச்சொல்பொருட்பயன் உண்டாயின்

நன்ருகா தாகி விடும். * தீயினுல் சுட்டபுண் உள்ளாறும் , ஆருதே

காவில்ை சுட்ட வடு. -