பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 135

தான் வடு இருக்கும். ஆனல், காவில்ை சுட்ட புண் ஆருது. உள்ளத்தில் வடுவாய்க் கிடக்கும். உடலைச் கடும் தீ உடல் வடுவைத் தரும். உள்ளத்தைச் சுட்ட சொல் உள்ளத்தில் வடுவைத் தரும். உள்ளத்து வடு ஆறுமோ மகனே ?

'ஆருது தந்தையே.'

அறம் நுழைந்து பார்க்கும்

ஆருத புண்ணைத் தருவது மட்டுமோ தீச் சொல் சினத்தால் பிறப்பது. அதை வளரவிட்டால் சினத்தை யும் அடக்க முடியாது. சினத்தை அடக்காது போல்ை பிற எந்தப் பொறியின் அடக்கத்தையும் பெறவே முடி யாது. ஆகவே, நாவடக்கம் சினத்தையே நீக்கும். *சினத்தையும் நீக்கி உள்ளத்தைக் காத்து, கற்கவேண்டிய வற்றைக் கற்று அடங்குதலாகிய வல்லமை பெறவேண்டும். அவ்வாறு பெற்றவனே அறம் தானே சென்று அடைய முன் வரும். அவன் அறியாமல் நுழைந்து சென்று அவனை அடைவதற்குரிய பக்குவமான காலத்தைப் பார்க்கும். பக்குவமான காலம் வாய்த்தவுடன் நுழைந்து அவனிடம் அறம் தங்கி நிற்கும். அறம் ஒருவனிடம் தங்கிளுல் அவன் பெருத சிறப்பும் உண்டோ ?

முடிவாகச் சொன்னல் *அடக்கம் உடைமை சான் ருேர் குழுவில் கொண்டு செலுத்தும், அடங்காமை கொடிய இருள் போன்ற விளக்கமில்லாத வாழ்வில் தள்ளும்.

- ..........സ്.----->ബ : ساسانیان است به همین نام نام

  • கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும், ஆற்றின் நுழைந்து. * அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.