பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 139

மகனே, ஒழுக்கம் என்பது பல பண்புகளின் தொகுப்பு. இதுவரை நீங்கள் அறிந்தவைகளும் அறிய இருப்பவைகளும் ஆகிய பண்புகள் ஒன்று கூடிய நடை முறையே ஒழுக்கம் எனப்படும். அப்பண்புகளுக்கு ஏற்ப அமையும் நடைமுறை நல்லொழுக்கம் எனப்படும். அப் பண்புகளிலிருந்து மாறிய நடைமுறை தீயொழுக்கம் ஆகும். ஆயினும் ஒழுக்கம் என்ருல் நல்லொழுக்கம் என்ற நினைவே எழ வேண்டும். அத்தகைய ஒழுக்கம் உடைமை தான் குடிப்பெருமையாகும். ஒழுக்கத்திலிருந்து தவறுங் தன்மை மக்கள் பிறப்பைவிட இழிந்த விலங்குப் பிறப்பின் தன்மை ஆகிவிடும்.

" தந்தையே, தீயொழுக்க வாழ்க்கை கொண்ட மக்கள் விலங்குகள் !' ஆகிருர்கள்.

ஆம் மகனே, எத்தகையவனும் எவ்வளவு சிறப் புடையதை இழந்தாலும் மீண்டும் பெறலாம். எடுத்துக் காட்டாக ஏடு புரட்டும் 'பார்ப்பான் தான் ஒதிய மறையை மறக்கக் கூடாது. மறந்தாலும் பின்பு ஒருகால் ஒதி அறிந்து கொள்ளலாம். ஆல்ை, அவன் ஒழுக்கத் தில் குன்றில்ை அவனது குடிப்பிறப்பு கெடும். மீண்டும் அதனைப் பெறமுடியாது. குடிப் பெருமையைப் பெற முடியாதது மட்டும் அன்று. வாழ்வில் உயர்வும் கிட் டாது. நீங்கள் பின்னர் பொருமை எனப்படும் அழுக் காற்றைப் பற்றி அறிவீர்கள். அந்த *அழுக்காற்றை

SMMMMSMMeSMMAAASAASAASAAASeSJJeAeAeSeSee Yoo-oo: --്.....--

  • ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். * மறப்பினும் ஒத்துக் கொளலாகும் ; பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

  • அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை,

ஒழுக்க மிலான்கண் உயர்வு.