உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 144

அஃதொடு 'நல்ல ஒழுக்கந்தான் இன்பத்திற்கு விதையாகும். தீய ஒழுக்கம் எக்காலத்தும் துன்பத்தையே தரும். மக்காள், நீங்கள் கொள்ளவேண்டியதைக் கொள்க !'

" தந்தையே, எக்காலத்தும் நிறைந்த துன்பத்தைந் தருவதையா கொள்வோம்! நல்லொழுக்கத்தை விதை என்கிறீர்கள். விதை முளைத்துத் தளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து சுவையைத் தருவது. ஒழுக்கமும் அதேபோல் படிப்படியாகப் பயனைத் தருவது என்பதை அறிந்தோம் ; அதனையே கொள்வோம்.'

பலகற்றும் அறிவில்லாதவர்

மக்காள், ஒழுக்கத்தைப் பெறின் வளமும் உரமும் பெறுவது மட்டுமன்று. சொல்லிலும் செயலிலும் சிறக்க லாம். 'தீய சொற்களைத் தவறியும் தம் வாயால் சொல் லும் குற்றங்கள் ஒழுக்கத்தைப் பெற்றவரிடம் பொருந்தா. திய சொற்களால் வரும் குற்றங்களை முன்னரே அறிந் துள்ளிர்கள். அக்குற்றங்கள் ஒழுக்கத்தால் இல்லாமற் போகும்.

மக்காள், இத்தகைய ஒழுக்கத்தை உயர்ந்த சான் ருேரோடு நெருங்கிப் பழகுவதால் வளர்த்துக் கொள் ளலாம். அஃதன்றிக் கணக்கற்ற நூற்களைக் கற்பதால் மட்டும் ஒழுக்க வளர்ச்சி அமையாது. அவ்வாறு கற்ற

వ్రైక్వాస్వా~~::

  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும். * ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே, தீய

வழுக்கியும் வாயால் சொலல்,