பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் மனையாளயே விரும்புக!

பேதையில் பேதை

  • { * - * - * * # # ? கண்ணு, எங்கே கண்ணம்மாவைக் காணுேம் ?

' தந்தையே, நேற்றுச் செல்லும்போது நாளே உயிரை வைத்துவிட்டு வருவாயோ என்று நயத்தோடு கேட்டீர்கள். அதிலும் ஒரு குறிப்பு இருக்கலாம் என்று உணர்ந்தேன். கண்ணம்மாவும் அவ்வாறே கருதித் தங்கிவிட்டாள்."

நன்று, மகனே ! நீங்கள் இருவரும் நுண்ணறிவு படைத்தவர்களே. இன்று பேச வேண்டியதைக் கண் ணம்மா இல்லாது பேசுவதே பொருந்துவதும் பண்பும்

மகனே, உலகத்துக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து வகை செய்தால் அவை மூன்றிற்குள் அடங் கும். தனி மனிதனது வாழ்வாகிய இல்லற துறவறங் களைப் பற்றிய அறக்கருத்துக்கள் ஒன்று. மக்களோடு கூடி வாழும்போது அறியவேண்டிய பொருட் கருத்துக் கள் இரண்டு. ஆணும் பெண்ணும் இணையும் இன்பக் கருத்துக்கள் மூன்று. அறம் பொருள் இன்பம் என்னும்