பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வள்ளுவர் வாழ்த்து

இவை மூன்றையும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் . அறிதல் வேண்டும். ஒன்றை அறிந்து மற்றவற்றை அறியாது விடுவதும் இரண்டை அறிந்து மற்றதை அறி யாதுவிடுவதும் நன்றன்று. அதனுல் தெளிவான வாழ்வை அடையமுடியாதென்றே கூறலாம். ஆண் பெண் இண்ை யும் இன்பக் கருத்துக்களை மட்டும் ஒருவன் அறிந்து மற்ற அறம், பொருள்களை அறியாமலோ அவசியமென்று கரு தாமலோ விடுப்பாளுளுல் அவன் ஒழுக்கங்களையெல்லாம் பெற்றவணுதல் முடியாது. அவன் பெண்ணின்பமே வாழ்வு என்று குறிக்கொண்டு வரையறை இல்லாமல் ஒழுகு வான். பெண்ணெண்ணமே மேலோங்கி ஒழுக்கத்தைப்

பெரிதாகக் கருதான். தன் மனைவியோடு அமையாது பிற

துக்குரிய பெண்ணையும் கொள்ள முனைவான். இவ்வாறு *பிறனுக்கு உரியவளாகிய பெண்ணை விரும்பி ஒழுகுவது அறியாமையாகும். அந்த அறியாமை உலகத்தில் அறத் தையும் பொருளேயும் அறிந்தவர்களிடம் இல்லையாகும். அறமும் பொருளும் அறிந்தோர், ஒழுக்கத்தையும் உல கியலையும் அறிந்து சான்ருேர் ஆவர்.

பிறர் மனைவியை விரும்புபவர் பேதையரே ஆவர். அவ்வாறு 'பிறன் மனேவியை விரும்பி அவனது இல்லத் துப் புற வாயிலில் கின்றவரைப் போன்ற பேதையார், அறத்தை விடுத்துச் செயல் புரிவதிலே நிலத்துப் போன தீயவர் கூட்டத்திலும் இல்லை. இப்பே ைதயார் தன்னை நம்பியவர் இல்லத்திலேயே கள்ளம் புரிபவர் ஆவர். பிறர் இவரை ஒழுக்கம் வாய்ந்தவர் என்று நம்பி அவ

. వ్రై" - "...్వ:్వ

  • பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

  • அறன்கடை கின்ருருள் எல்லாம், பிறன்கடை

கின்ருரின் பேதையார் இல்.