பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து

எழுத்தாணியிலும் நாட்டத்தைச் செலுத்திய வள்ளுவச் செம்மல் அண்மையிலிருந்த இருக்கையைக் காட்டினர்; அவர்களும் தட்ட இயலாமல் அமர்ந்தனர்.

மகளே, இந்தக் கனியை எம் பரிசாகக் கொள்க ! என்று ஓர் ஏட்டை நீட்டினர். வள்ளுவச் செம்மலார் கையால் பரிசு பெறும் துடிப்போடு குமரி ஏட்டைக் கையேந்திப் பெற்ருள். ஏடும், ஏட்டில் எழுத்தும் இருந் தனவன்றிக் கனியைக் கண்டாளில்லை. அவளது முகக் குறி வாயிலாக, அவளது சிந்தனையை உணர்ந்த வள்ளு வர் புன்முறுவல் பூத்தார். -

மகளே கனியெங்கே என்று பார்க்கிருயோ ? அது விந்தையான கணி; விரைவில் கண்களுக்குப் புலப்படாது. அது விதையில்லாத வியப்பான கனி; அது போன்ற கனி உலகில் வேறெங்கும் கிடையாது. அதை நீ பெற வேண்டுமானல் பெறுவதற்கு முன் அதன் சுவையை உணரவேண்டும். நீ எந்த அளவுக்கு அந்தக் கனியின் சுவையை உணர்கிருயோ அந்த அளவுக்கு அஃதும் இனிக்கும். உணவே, நீ என்னை விரும்புகிருயா ? என்று கேட்டு நாம் உண்ணுவதில்லை. உண்ணப்படும் உணவுக்கு நம்மேல் விருப்பமிருக்க வேண்டுவதில்லை. ஆனல், இந்தக் கனி அத்தகைய உணவுப்பண்டமன்று. நீ எந்த அளவுக்கு அந்தக் கனியைச் சுவைக்க விரும்பு கிருயோ அந்த அளவுக்கு அந்தக் கனியும் உன்னை விரும்பவேண்டும். அந்த அளவு அதன் விருப்பத்தைப் பெற்ருல்தான் நீ அந்தக் கனியைப் பெறுவாய். அதனல், இன்ப வாழ்வையே பெற்றவளாவாய். காண்க, மகளே அந்தக் கனியை !!-என்பன போன்ற செய்திகளை யெல்லாம் உள்ளடக்கி மிளிர்ந்தது அவரது அந்தப் புன் முறுவல்.