பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வள்ளுவர் வாழ்த்து

மகனே, பழி ஆகும் என்றுமட்டும் கூறிவிட முடி. யாது. பிறன் இவனை நம்பி ஐயமின்றி அளவளாவிப் பழகுவான். இல்லிலும் பழக விடுவான். அதைக் கொண்டு இவன் இத் தீய செயலே எளிதாகக் கொள் கிருன். இவ்வாறு எளிது எனப் பிறரது மனைவியின் மேல் முறை மீறுபவன் எக்காலமும் அழியாமல் நிலைத்து கிற்கும் பழியை அடைவான்.

பழிமட்டுமோ ! இவன் முறை மீறி எல்லையின்றி ஒழுகுவதால் தன்மேல் ஐயம் கொள்ளாத பிறனும் நாளடைவில் ஐயம் கொள்வான். ஐயம் உறுதிப்பட் டால் பகை கொள்வான். ஆகவே பகையைப் பெறு வான். செய்கின்ற செயல் மிக இழிவானமையால் அது பாவமாகும். பகைத்தவனுக்கு அஞ்சி ஒழுக வேண்டும். ஆகவே, *பிறன் மனைவியிடம் முறைமீறிச் செல்பவனிடம் பகை, பாவம், அச்சம், பழி என்னும் 5ான்கும் நீங்காமல் நிலைக்கும்.'

' தந்தையே, அத்தகைய இழி செயலை அன்புக் குரிய மனைவி அறிந்தால் என்ன நிலை பெறுவாள் ? அவளையும் வஞ்சித்தவனுக இல்வாழ்க்கையையும் கெடுத் துக் கொண்டவன் ஆக நேரும்.'

மகனே, உனக்குத் தோன்றியது போன்ற நல்ல எண்ணம் அறத்தோடு பொருந்தி இல்வாழ்க்கை நடத்து பவனிடம்தான் தோன்றும். ஆகையால், *பிறனுக்கு

  • எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

  • பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கன். * அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை கயவா தவன்.