பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 147

உரிமையானவரின் பெண்மையை உள்ளத்தாலும் விரும்பா தவனே அற இயல்போடு பொருந்தி இல்லறத்தில் வாழ்ப: வன் என்று சிறப்பிக்கப்படுவான்.

பேராண்மையும்

பல நன்மையும்

இல்லறத்தான் ஆண். அவன் ஆண்மையை உடை யவன். அவன் பிறருக்குரிய பெண்மையைக் களவாக விரும்புதல் ஆண்மைக்கு அழகன்று. போர், போட்டி முதலியவற்றில் வெற்றி கொள்ளத் தளராது முனைந்து செயல்படுவது ஆண்மை. பெண்மை கருதி உள்ளம் தளராமல் கட்டுப்படுத்தும் மன வலிமையும் ஆண் மையே. முன்னதோ உடலால் பிறரை வெல்வது, பின்னதோ உள்ளத்தால் தன்னைத் தானே வெல்வது. ஆகையால் இது பெரிய ஆண்மை.

  • பிறனுடைய மனைவியைக் காம எண்ணத்தோடு நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறம் ஒன்று மட்டு மன்று : கிறைந்த ஒழுக்கமும் ஆகும்.

மேலும் பின்வருமாறு உறுதிப்படக் கூறலாம் : *அஞ்சத்தக்க பெரும் கடல் சூழ்ந்த உலகத்தில் பல நன்மைகளையும் அடைவதற்கு உரியவர் யார் என்ருல் பிறருக்கு உரிமை பூண்டவளது தோளைத் தழுவாதவரே ஆவர்.' - -

.......ہے ہمہ۔- ہمبس‘‘

  • பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்ருேர்க்

கறன்ஒன்ருே ஆன்ற ஒழுக்கு:

  • கலக்குரியார் யாரெனின், வைப்பின்

பிறர்க்குரியாள் தோள்தோயா தார்,