பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வள்ளுவர் வாழ்த்து

" தந்தையே, அறத்தொடு வாழ்பவன் என்னும் சிறப்பு, பேராண்மை, நிறைந்த ஒழுக்கம், பல நன்மை களுக்கும் உரிமை ஆகியவற்றையும் பிறன் இல்லாளே விரும்பாமை தருவதாகிறது."

இவை மட்டுமல்ல மகனே 'ஒருவன் அறநெறி கொள்ளாதவளுகத் தீயவைகளேயே செய்தாலும் பிறனுக்கு உரிய பெண்ணின் பெண்மையை விரும்பாமையே சிறந்தது ஆகும்."

" தந்தையே, இல் வாழ்வில் இது ஒரு பெரும் தீங்கே யாகும். இதைப்பற்றி நீங்கள் விளக்க, நான் ஏற்றுக் கொண்டிருந்த போதெல்லாம் என் உள்ளம் கண்ணம்மா வையே சுற்றிக் கொண்டிருந்தது.'

அதுதான் நன்று மகனே. உள்ளத்தால் சுற்றி யது போதும். இல்லம் சென்று உடலாலும் சுற்றுக !!-- என்ருர் தந்தை.

SMMMS SSAAAASA SAAAAS eeeSJSeS

  • அறன்வரையான் அல்ல செயினும், பிறன்வரையாள்

பெண்மை கயவாமை நன்று. -