பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வள்ளுவர் வாழ்த்து

ருக்குப் பிடிக்கவில்லை. தோண்டி எடுக்கும் மண்ணை அப் புறப்படுத்தாமல் அங்கேயே போட்டு வந்தார். அதை வற்புறுத்தினேன். அதற்காக இழிவான சொற்களை வீசியதோடு அந்த மண்ணை எடுத்து மேலே வீசி விட்டார்.'

அதனால் இவர் அமைதி இழந்திருக்கிருர் தந்தையே.' - -

மகளே, அமைதி இழந்ததற்குக் காரணம் பொறுமை இல்லாததுதான். மகனே, கிணறு தோண்டி யும் அதனல் அறிய வேண்டியதை அறியாது போய்விட் டாயே நிலத்தை மண்வெட்டியும் பாறையும் கொண்டு, வெட்டியும் குத்தியும் அன்ருே கிணற்றைத் தோண்டி யிருப்பாய். தோண்டப்படுகின்ற நிலத்தில் நின்று கொண்டே அன்ருே அந்த நிலத்தைத் தோண்டியிருப் பாய். என்னைத் தோண்டுகிருயே என்று அந்த நிலம் உன்னைக் கீழே தள்ளியதுண்டோ மகனே ? பொறுமையை அது எப்படிப் புகட்டுகிறது பார். "தன் அனத் தோண்டுகின்றவரையும் தாங்குவது நிலத்தின் பண்பு. அதுபோலத் தம்மை இகழ்வாரையும் பொறுத் துக்கொள்வதுதான் மக்களின் தலையான பண்பு. தன்னல் தாங்கப்படுகிறவன் தன்னையே தோண்டுவதையும் அன்ருே நிலம் பொறுத்துக் கொள்கிறது பொறுத்துக் கொண்டு அவர் விரும்பும் நீரையன்ருே சுரந்து உதவு கிறது ! உன்னுல் தாங்கப்படுபவர் ஆளுலும் அவர்மேல் பொறுமையிழக்கலாமா ? நிலம் பொறுத்துக் கொள்வது மட்டுமன்றி அவருக்கு உதவியும் அன்ருே செய்கிறது ? நீயும் அவ்வாறு உதவ வேண்டியவன் அன்ருே ! பொறுமை கொள்க மகனே !

SAS S S AAAA S S SAAAASAASAASAA AA ASASASS AMSMSMSMSMSMMSAMMAMMAAASAASAASAASAASAASAAAS

  • அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.