பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வள்ளுவர் வாழ்த்து

தேர்வு வைக்கலாம் என்று கருதுகின்றேன். ஒரு வி.ை சிறிது நுண்ணறிவுடன் விடை தரவேண்டும். வறுமை யுள் வறுமை எது ?"

கண்ணன் சிறிது எண்ணியபின் வறுமையுள் வறுமை விருந்தாய் வந்தவரை ஏற்றுப் போற்ருமை தான் தந்தையே.”

ஆம், வறுமையுள் கொடிய வறுமை விருந்தை ஏற். றுப் போற்ருமல் நீக்குதல். அ.தேபோல அறிவற்றவர் சொல்லாலும், செயலாலும் உண்டாக்கும் தீமையைப் பொறுத்தல் வலிமையுள் உரம் பாய்ந்த வலிமையாகும். மகனே அந்த வலிமையைப் பெற்று மன நிறைவு பெற வேண்டியவன் நீ. ஆகவே 'மன நிறைவு உன்னைவிட்டு நீங்காமல் பெற விரும்பினல் பொறுமையைப் போற்றி ஒழுகவேண்டும். -

தந்தையே, அவ்வாறே இனிப் போற்றி ஒழுகு வேன். தீய சொற்களிடத்தும் பொறுமை கொள்வேன்; திய செயல்களிடத்தும் பொறுமை கொள்வேன்.' -

பெரியவருள்ளும் பெரியவர்

மகனே, பொறுமை கொண்டால் அதற்கு ஏற்ற பெருமை பெறுவாய். தீய சொற்களைப் பொறுக்கும் பொறுமையால் தூய்மையையும், பெருமையையும் பெறு வாய். தூய்மையில் சிறந்தவராக எவரைக் கூறுவர் ??

துறவிகள் தூய்மையில் சிறந்தோர் என்பர்.'

  • இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை,

  • கிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.