பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து f53

'அவர்களும் தம்மை இழிவுபடுத்தும் சொற்களைச் சொன்ஞல் தங்கள் துறவு நிலையிலும் தம் வலிமையைக் காட்ட முற்படுவர். அதனல், அவர்களது மனத்துாய் மையில் மாசுபடியும். ஆனல், "எல்லேமீறி இகழ்பவரு டைய கொடிய வாயிலிருந்து வரும் கொடுஞ் சொற்களைப் பொறுக்கும் இல்லறத்தவர் துன்பம் செய்யாத உள்ளத் தைப் பெறுவர். அதல்ை, பொறுமை கொள்பவர் துற வறத்தவரைவிடத் துய்மையானவர் ஆவர்.

அதுமட்டுமன்று அவரைவிடப் பெரியவரும் ஆவர். பிறர் கூறும் கொடுஞ்சொற்களைக் கேட்கும்போது உள் ளம் அவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்று முனைப் போடு எழும். அதனை அடக்கினுல்தான் பொறுமை கொள்ளலாம். மேலும் பிறரது இழிசொற்கள் பெருகப் பெருக முனைப்பை அடக்கும் முயற்சியும் பெருக வேண் டும். இவ்வாறு பயில்வது ஒரு நோன்பேயாகும். துற வினரோ உணவு உண்ணுமல் உடலை வருத்தி நோன்பு கொள்வர். இல்லறத்தாரோ அறுசுவை உணவும் கொண்டு, உடலையும் வளப்படுத்தி அவர் பெருத பொறு மையைப் பெறுபவர். ஆகையால், “உண்ணுமல் நோன்பு கொள்ளும் துறவி பெரியவரே. ஆனாலும் பிறர் கூறும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல் லறத்தார்க்கு அடுத்த பெரியவராகத்தான் அவர் அமைவர்.'

தந்தையே, இத்தகைய தூய்மையையும், பெரு மையையும் பெருமல் நான் கெடுத்துக கொள்ள இருந்

SAASAASAASAAAS

  • துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய்

இன்னச்சொல் நோற்கிற் பவர். * உண்ணுது நோற்பார் பெரியர், பிறர்சொல்லும்

இன்னுச்சொல் நோற்பாரின் பின். வ. வா-10.