பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வள்ளுவர் வாழ்த்து

தேன். எனக்குத் துன்பம் செய்த அவரை இன்றைக் குள் கண்டித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன்." . o

பொறுமை தந்த வெற்றி

மகனே, அவர் உன்மேல் மண்ணே வீசித் துன்பம் தந்ததால் நீ நொந்தாய் அன்றே! அதே போல் நீ அவர்மேல் மண்ணுக்குப்பதில் சொல்லை வீசித் துன்பம் தந்தால் அவரும் அதுபோலத்தானே நோவார். அந்த் நோவை எண்ணிப்பார். அது இரங்கத் தக்கது அன்ருே? *தகுதி அல்லாத துன்பங்களைப் பிறர் தனக்குச் செய்தா லும் பொறுமை இழந்து, திரும்ப அவருக்குத் துன்பம் செய்தல் கூடாது. செய்வதால் அவர் பெறும் துன்பத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்குத் தான் நொந்து பதிலுக்குத் தீமையைச் செய்யாது பொறுமை கொள்தலே சிறந்தது.

அவ்வாறு கொள்வதால் மதிப்புக் குறைவோ, தோல்வியோ இல்லை. மாருகத் துன்பம் செய்தவர் நீ கொண்ட பொறுமையை எண்ணித் தலை குனிவார். அது உனக்கன்ருே வெற்றி ! -

  • தன் முனைப்பால் மிகுதியான தீமையைச் செய்த வரையும் தாம் தமது பொறுமைத் தகுதியினல் வென்று விடவேண்டும்.'

திறனல்ல தற்பிறர் செய்யினும், கோகொக் தறணல்ல செய்யாமை கன்று.

  • மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.