பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வள்ளுவர் வாழ்த்து

ஆருக ஒடச் செய்யும். அந்த அழுக்கு ஆறுதான் பொருமை என்று முன்னரே கண்டாய். அதைக் கொண் டவர் அடையும் சிறுமைகள் பல. உன் உறவினர் அதைக் கொண்டதால்தான் சிறுமை பெற்ருர், அந்த அழுக்கு ஆற்றை நீக்க வேண்டும். ஒழுக்க ஆற்றைத் தோற்றுவிக்க வேண்டும். பொருமை இல்லாமை ஒழுக்க ஆருகும் ; அதாவது ஒழுக்க நெறியாகும். ஒருவன் தன் உள்ளத்தில் என்றும் பொருமையில்லாத தன்மையைத் தன் ஒமூக்க நெறியாகக் கொள்ள வேண்டும். -

மகனே ஒழுக்கம் பலவகைப் பண்புகளின் தொகுப்பு என்று அறிந்தாய். பொருமை இல்லாமை என்னும் இந்தப் பண்பு பலவகைப் பண்புகளிலும் இன்றி யமையாத பண்பாகும். இன்றியமையாத பண்பு இணை யில்லாத பயனையும் தரும். ஆகையால், *எவரிடத்தும் பொருமை கொள்ளாமையாகிய ஒழுக்கத்தைப் பெறவேண் டும். பெற்ருல் பிறஒழுக்க நெறிகளால் பெறும் சிறந்த பேறுகளுக்குள்ளும் இதல்ை பெறும் பேற்றுக்கு ஒப்பானது இல்லை. . У

மகனே, பொருமை நீக்கப்பட வேண்டிய ஒன்றென் பதை அறிவாய். அந்தப் பொருமை நீங்கினுல் ...?

தந்தையே, பிறர் பொருளைக் கவரும் அவா நீங் கும்; சினம் நீங்கும் ; கடுஞ்சொல் நீங்கும். இவற்றின் நீக்கத்தால் குற்றமற்ற உள்ளம் நிலைக்கும். குற்றமற்ற உள்ளமே அறமாகையால் அறமே நிகழும்."

SMSMSMAMASAMMSMSAASAASSAAAAAAS AAASASASSMSSSMSSSMSSSMSSSMSSS ఘొషిష:షష:...

  • ஒழுக்காருக் கொள்க, ஒருவன்தன் கெஞ்சத்

தழுக்க றிலாத இயல்பு, .

  • விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லை,யார் மாட்டும்

அழிக்காற்றின் அன்மை பெறின். t