வள்ளுவர் வாழ்த்து 165,
என்று முனைந்து நின்றேன். பிறர் பொருளைக் கவர்ந்: தால் வருத்தமின்றி வாழலாம் என்று பிறர் பொருள் மேல் அவாக் கொண்டு அலைந்தேன். எனக்கு உதவி செய்துவந்த தம்பியின் பொருளையும் கவர முனைந்தேன். அத்தகைய எனக்குத் தம்பி பேருதவி செய்து என்னைத் திருத்தியுள்ளான். இல்லையேல், என் அவா எல்லை மீறி யிருக்கும். என்ன கொடுமை செய்திருப்பேனே !'
§ பிறருக்கு உரிய பொருள்மேல் அவாக்கொண்டால் எதையும் செய்யத்தான் தூண்டும். பயனும் கொடுமை யானதாக அமைந்துவிடும் மக்காள், செல்வம் என்பது மக்கள் வாழ்விற்கு நன்மை கொடுக்கும் ஒன்றுதான். ஆயினும், அந்தச் செல்வம் நேர்மையோடு சேர்க்கப்பட வேண்டும் அன் ருே ? இச்செல்வம் நமக்குச் சேர்தற்கு உரியதா அல்லது பிறருக்கு உரியதா' என்று நடுநிலை யில் நின்று ஆராய்ந்து சேர்க்கப்பட வேண்டும். அவ்வா நன்றி * நல்ல வழியில் வந்து நன்மையைத் தருவது பொருள். அது பிறரது ஆயின் நடுவு நிலை தவறிக் கவரக் கூடாது. கவர்ந்தால் நன்மையைச் செய்யும் செல்வமே குடியைக் கெடுத்துக் குற்றத்றையும் அந்த நேரத்திலேயே தரும்.
மகனே, நடுவுநிலை தவறுதல் எத்துணை இழிவு என்பதை முன்னரே அறிந்துள்ளாய் அன்ருே !!
ஆம் தந்தையே! நடுவுநிலை தவறிப் பெறும் செல் வத்தை அந்த நேரத்திலேயே கைவிடுதல் வேண்டும் என்று அறிந்தேன். அதுபோலவே நடுவுநிலையின்றிப் பெறப்படும் செல்வம் அந்த நேரத்திலேயே குடியைக் கெடுப்பது ஆகிறது.' -
ੋ பொருள் வெ.கின், குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.