பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 169

உள்ள செல்வமும் போகும் ; வந்த செல்வமும் போகும் தந்தையே.'

'மகனே, போகும் போக்கில் குடும்பத்தைக் கெடுத்து விட்டுப் போகும். இத்தகைய விளைவைத் தருவது அவா வால் பெறும் செல்வம். இவற்றை எல்லாம் இல்லறத் தில் அமைந்தவர் எண்ணிப் பார்த்தல் வேண்டும். *எண்ணிப் பார்க்காமல் பிறர் பொருள்மேல் அவாக் கொண்டால், அந்த அவா கேட்டைத் தரும். ஆனால், அவாக்கொள்ளாமை என்னும் பெருமிதம் வாழ்வின் வெற்றி யைத் தரும்.

மக்களே-ஐயா, நீங்களும் அவாக் கொள்ளாமல் என்றும் பெறுமிதத்தைக் கொள்க ! அதனுல் வாழ்வின் வெற்றியைப் பெறுக!'-என்ருர் தந்தை.

பெரியீர், தம்பி வாழ்வின் வெற்றிப் பாதையில் பெருமிதத்தோடு நடப்பவன். நானே தவறியவன். ஆயினும், உங்களாலும், உங்கள் வாழ்த்தைப் பெற்ற தம்பியாலும் திருந்தியவன். என்னையும் மதித்துத் தாங் கள் வாழ்த்தியதை எண்ணி மிகமிகப் பூரிக்கிறேன். அந்தப் பூரிப்பு குறையாமல் ஒழுகுவேன். இந்த அன் புச் செம்மல்களுக்கு உற்ற துணையாய் அமைந்து செயல் புரிவேன்.'- என்று உறுதி கூறினர் உடன் வந்தவர்.

'நன்று, வாழ்க கிணற்று வேலை முடிந்துவிட்டதா? தந்தையே நாளைக் காலை முடித்து விடுவோம்." உங்களுக்கு இனி என்ன குறை , செல்க! சென்று

வருக !

---~~

இறலினும் எண்துை வெஃகின் விறனினும் வேண்டாமை என்னும் செருக்கு. வ.;வா-11.