பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வள்ளுவர் வாழ்த்து

மக்களே, அத் தீமை எத்தகையது என்பதும் அறி யத் தக்கது. யாவரும் மகிழ்ச்சி கொள்ளுமாறு நட்புக் கொள்ளுதலைத் தெளிவாக அறியாதவர் தமது உறவினரும் தம்மை விட்டுப் பிரியுமாறு புறங்கூறிப் பிரிப்பர். இதஞல் தம் உறவைப் பிரித்த தீமை செய்தவராவர். -

நட்பினரைத் தேடிக்கொள்ளத் தெரியாதவர் கிடைத்த நட்பைக் காத்துக் கொள்ளவா செய்வார் ? தமது புறங்கூறும் தன்மையால் தம்மோடு கூடியவரை யும் அவர் இல்லாதபோது துாற்றுவர். 'தம்மோடு கூடிப் பழகும் தம்மவரது குற்றத்தையே புறங்கூறித் துாற்றும் வழக்கத்தை உடையவர் தொடர்பில்லாத அயலாரிடத்து என்ன செய்வாரோ ?”

கண்ணன் : உள்ள குறைகளை அதிகப்படுத்தித்

துாற்றியவர் ; இல்லாத குற்றத்தையும் இருப்பதாகப் பழி சொல்லித் தூற்றுவர்.

தன்னைத்தானே காட்டிக்கொடுப்பவன்

நன்று சொன்னுய் மகனே! புறங்கூறிப் பழி துாற்று பவன் மூன்ருமவர் ஒருவரிடந்தானே சொல்லவேண்டும்? அவ்வாறு சொல்பவன் ஒருவரிடம் சொல்வதோடு விடு வான ? பலரிடமும் சொன்னல் அன்ருே பழி தூற்றிய தாகும். ஆகையால் பலரிடமும் சொல்வான். அதனுல், பலரும் அவனது புறங்கூறும் தன்மையை அறிவர். அறிந்தவர்-இவன் ஏன் இவ்வாறு புறங்கூறித் திரி

SAASAASAASAAeSeSeeSeSeeSeMMeMMSMAHS AMSAMSMSMSMMAMMAMAMMAMAMAMMAMMS

  • பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி

நட்பாடல் தேற்ரு தவர். w

  • துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினர்

என்னகொல் ஏதிலார் மாட்டு !