பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வள்ளுவர் வாழ்த்து

பத்தை அறிந்தவன் அதற்காகக் கலங்குவான். பிற உயிர்களுக்கும் இதுபோல்தானே கலக்கத்தைத் தரும் என்ற நல்ல உள்ளம் கொள்வான். அதனுல் பிற உயி ருக்குத் துன்பம் செய்வதனின்றும் நீங்குவான். இவ் வாருகப் புறங்கூருமை பிற உயிர்களுக்கும் நன்மை செய்வது ஆகும்.' .

கிலத்துக்குச் சுமை

கண்ணன்: தந்தையே, இதனை அறியாமல் பிறர் எப்போது முகம் திரும்புவார் என்று பார்த் திருந்து அவர் முதுகுப் புறத்தைக் கண்டதுமே அவரைக் குறை கூறும் மக்களும் உள்ளனரே !

கண்ணம்மா : அவரும் மக்களுள் ஒருவரெனத் திரி கின்றனர். அவர்களையும் இந்த நிலமும் தாங்குகிறது!

மக்காள், ஒருவரைக் காணுத உடனே அவரைப் பற்றிய இழி சொல்லைச் சொல்பவனது உடல் கிலத்துக்கு ஒரு சுமைதான். அந்தச் சுமையையும் தாங்குவதே தனக்கு அறம் என்று கருதி நிலம் அவனையும் தாங்குகின்றது போலும் !

கண்ணன் : புறங்கூறுதலால் நிலத்துக்கும் சுமை யாகி விடுகிருன்.

தந்தை அத்தகைய இழிந்த புறங்கூறுதல் உங்க ளிடம் இல்லை. இனியும் அது உள்ளத்தை அண்டாத வாறு வாழ்க!

SAAAAAAS AAASASAAAMMAMMA SAMAAAS SAASASAAAMMAMAMeeiSSMSS

  • அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம், புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை !