பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 181

ஒரு தன்மையை மிகுதியாசு வெளிப்படுத்துவான ல்ை அந்தத் தன்மையே அவனது பிற தன்மைகளை அறிவிக் கும் அன்ருே ? - -

' ஆம், தந்தையே. புறங்கூறும் இழிந்த தன்மை இவன் அறம் சொல்லும் உள்ளம் இல்லாதவன் என் பதைக் காட்டும் என்று நேற்று அறிந்தேன்.'

அதாவது காட்டிற்று. சில தன்மைகள் வாய் திறந்து பேசுவது போன்று சொல்லும். பயனில்லாத பேச்சு அவ்வாறு சொல்லுவது. பயனில்லாது பேசு பவன் ஆராய்ந்து எண்ணிப் பார்த்துப் பேசுபவன் அல் லன். வாய்ப் போக்கில் வெற்றுப் பேச்சு பேசுபவன். அந்தப் பேச்சின் இடையே அவன் உள்ளத்து எண்ணங் களேக் காட்டும் சொற்களும் அவனையறியாமல் வந்து விழும். அச் சொற்கள் எதைச் சொல்லும் ? பயன் இல்லாதவற்றை விரிவாகச் சொல்லும் சொற்கள் இவன் நன்மை யில்லாதவன் ' என்பதைச் சொல்லும். என்ன மகளே சிரிக்கிருய்?"

" தந்தையே, ஒருவரால் பேசப்படுவதே சொல். அந்தச் சொல்லையும் பேசவைத்து விட்டீர்களே என்று நினைத்தேன் ; மகிழ்ந்தேன். அதிலும் ஒருவர் ஒன்று மில்லாததைச் சொல்ல அவர் வாய்ச் சொல்லோ அவருக் குப் புறம்பாக அவர் கொண்ட திய தன்மையைச் சுட்டு வதை எண்ணினேன் ; சிரிப்பு வந்தது.'

கண்ணன் : அந்தப் பயனில்லாதவற்றையும் விரி வாகச் சொல்லப் புகுந்தது கேடு அன்ருே என்று நினைத் தால் நகைப்பாய் கண்ணம்மா. - -

- * ಕ್ಲifiಖT என்பது சொல்லும், பயனில

பாரித் துரைக்கும் உரை.