பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வள்ளுவர் வாழ்த்து

குறிக்கும் சொற்களையே இட்டுச் சொல்வதை எண்ணி அவ்வாறு பார்க்கிருள் போலும். ஆண்கள் மட்டுந்தான் பயனில்லாது பேசுபவர்கள் என்பது கண்ணம்மாவின் முடிவு. எனக்கு இதுபோது யாரோ ஒருவர் சொன்ன தாகச் சில தொடர்கள் நினைவுக்கு வருகின்றன.- ஆண் கள் புற உலகிலும் உலவும் வாய்ப்பில் அமைந்தவர்கள். ஆகவே, பெரும் பகுதி கருதியே சில இடங்களில் மகன் என்று குறித்துள்ள தங்கள் கருத்தையும் குறிப்பாக உணர்ந்து கொண்டேன் -என்று மக்கட்பேற்றின் விளக்கத்தின்போது சொன்னர்கள் போலும். கண் ணம்மா தானே அவர் ! என்று கூறி நகைத் தான்.

அவளும் திரும்பிக்கொண்டு நகைத்தாள்.

தந்தை மக்காள், நீங்கள் பெற்றுள்ள தெளிவை எண்ணி மகிழ்கிறேன். உங்கள் இருவருக்குமே சொல் கிறேன்: *ளவற்றையேனும் சொல்ல நேர்ந்தால் பய னுடைய கருத்துக்களையே சொல்லுக 1 (அவ்வாறு சொல் லும்போது) சொற்களில் பயனில்லாத சொற்களைச் சொல் லாது விடுக !

' தந்தையே, பயனற்ற சொற்களால் அடையும் இழி நிலையைக் கேட்கும்போது அதை எண்ணி அஞ்சு கின்ருேம்." - -

அஞ்சுவது நன்றேயாகும். திய சொல்லுக்கு அஞ்சுவது போன்றே தீய செயலுக்கும் அஞ்சவேண்டும். இன்றே எல்லா அச்சங்களையும் கொள்ளவேண்டாம். நாளே ஒரு அச்சத்தைக் கொள்ளலாம். இப்போது வேறு அச்சமின்றிச் சென்று வருக!" . -

米 ಧಿಕTು சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல், *