பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வள்ளுவர் வாழ்த்து

"ஆம் தந்தையே. பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம்-செருக்கு வெற்றியைத் தரும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிந்தேன்."

ஆம், பிறர் பொருளை விரும்பாமையால் செருக்கு உண்டாகும். அது நல்ல செருக்கு ஆகும். அஃதே போல்-யாம் வள்ளல் தன்மை உடையோம்-என்னும் தன்மையால் செருக்கு உண்டாகும். மற்றவர்க்கு விருப் பத்தோடு உதவும் ஆண்மையால் செருக்கு உண்டாகும். நட்பால் அடையும் நன்மையால் செருக்கு உண்டாகும். அன்போடு இணைந்து வாழும் காதல் வாழ்வால் செருக்கு உண்டாகும். இவையெல்லாம் செருக்குகளே. ஆயினும் நன்மையால் விளைந்தவை.-யான் மேம்பட்டவன் ; எனது பொருள் சிறந்தது-என்னும் எண்ணங்களால் உண்டாகும் செருக்கு உண்டு. யாம் ஒளி பொருந்திய அறிவு பெற்றுள்ளோம்-என்னும் எண்ணத்தால் உண் டாகும் செருக்கு உண்டு. இவைகள் தன்முனைப்பால் விளைந்த செருக்குகள் ஆகும். இத்தகைய செருக்குகள் தீமையையே விளைவிக்கும். இவைபோன்றே பிறனுக்கு இத்தகைய தீமையைச் செய்து விட்டோம் என்று செருக்குக் கொள்வோரும் உண்டு. இவைகளை எல் லாம் கருதித்தான் அஞ்சத்தகும் பெருமிதம் உண்டு

என்றேன்.

ஆகவே, தீயசெயல் எனப்படும் செருக்கு அஞ்சத் தக்க ஒன்று. இத்தகைய தீய செயல் எனப்படும் செருக் கைக் கண்டு தீய செயலினர் அஞ்சமாட்டார். மேம்பட்ட சான்றேர் அஞ்சுவர். நீங்கள் மேம்பட்ட இல்லறச்

SAASASAAAAASA SAASAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS പൂപപ്പ്.--------TamilBOT (பேச்சு) 01:45, 31 ஜனவரி 2016 (UTC)--പ

  • தீவினையார் அஞ்சார் ; விழுமியார் அஞ்சுவர்,

தீவினை என்னும் செருக்கு,