பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வள்ளுவர் வாழ்த்து

பெற்ற அறிவு யாவற்றிலும் மேம்பட்ட அறிவு என்று சான் ருேர் கூறுவர். சான்ருேர் கூற்ருகிய இக்கருத்தை முன்னரும் குறிப்பாக நீவிர் அறிந்ததுண்டு.

"ஆம், தந்தையே. பிறர் பொருளைக் கவருதல் அறிவற்ற செயல். அதனைச் செய்வதால் ஒருவன் பெற்றுள்ள நுட்ப அறிவும் பயனற்றுப் போகும் என்று முன்னர் அறிந்துள்ளோம்.'

வறுமைக்கு வறுமை

மக்காள், "மறந்தும் பிறனுக்குக் கேடுதரும் தீய செயல்களே எண்ணுது விடுக எண்ணினல் எண்ணிய அவனுக்குக் கேட்டைத்தர அறம் எண்ணும். மறந்தும் எண்ணுது விடுக என்றேன். ஏனென்ருல் மறந்து எண்ணக்கூடிய நிலை ஏற்படலாம். ஒருவன் வறுமை யால் துன்புற நேரலாம். அதுபோது அதைத் தீர்த் துக் கொள்ளும் முனைப்பால் தீமையைச் செய்யலாம் வறுமை தீர வேண்டுமே; துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமே-என்னும் துடிப்பால் தன்னல் செய்யப்படு வது நன்மையா, தீமையா என்று ஆராயாமலே செய்ய மூனைவான். அந்த நிலையிலும் செய்தல் கூடாது. *யான் வறுமை பெற்றுள்ளேன்-என்று கலங்கி அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டிப் பிறர்க்குத் தீயன செய்யக் கூடாது. செய்தால் மீண்டும் வறுமையையே பெற்றவன் ஆவான். தன் திய செயலால் நன்மை விளைவதுபோல்

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS 、ごーエーご

  • மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. * இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலஞகும் மற்றும் பெயர்த்து.