பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புரவு செய்க !

மழை காட்டும் உண்மை

மக்காள், மழைத்துறலிலா வந்தீர்கள்? நனைந்து போனிர்களோ ? -

கண்ணன் : இல்லை தந்தையே. சிறு தூறல் தான்* நனைப்பு இல்லை. பெருமழையாகப் பெய்து நனைந்திருந் தாலும் மகிழ்ச்சிதான் கொண்டிருப்போம்.

மழைப்பயிர் விட்டிருக்கிருய் போலும் !!

"ஆம், தந்தையே. நல்ல மழை பெய்தால் நல்ல விளைவு கிட்டும். இதுபோது நல்ல மழை தேவை. நேற்றிரவு பெய்த மழையும் மகிழ்வைத் தந்தது.'

" உன் தேவைக் கேற்பத்தான் மழை பெய்துள் ளது. அந்த மழைக்கு நீ ஏதேனும் கைம்மாறு செய்ய வேண்டாமோ ?”

கண்ணன் சிரித்தான்.

என்ன மகனே சிரிக்கிருய்?

' தந்தையே, மழைக்கு யாரால் என்ன கைம்மாறு செய்ய முடியும் ? செய்தாலும் செய்யும் கைம்மாறு ஈடாகாதே."