பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 15

காமத்தின் மென்மையையும் பக்குவத்தையும் உணர்ந்து அதற்கேற்ப ஒழுகி அதன் பயனைத் துய்ப்பவர் சிலரே யாவர். அம்மலரை நுகரும் சிலரில் நீங்களும் அமைய வேண்டுமன்ருே ?

மலர், தேனை வெளிப்படுத்துவதை அறிவீர்கள் அந்த இயற்கைத் தேனைச் செயற்கையில் சமைத்தெடுப் பதுவே கள்ளாகும். புதுமை மலராம் காமமும் ஒரு வகைக் கள்ளே யாகும். கள்ளை அளவோடு அருந்தினுல் களிப்பைத் தரும். காமமும் ஒத்த அன்போடமைந்தால் களிப்பைத் தரும். இவ்வகையில் காமமும், கள்ளும் ஒத்தவையே. ஆல்ை, காமத்திற்குக் கள்ளிற்கில்லாத வியத்தகு திறன் உண்டு. கள்ளைக் கண்ணுல் மட்டும் கண்டு களிப்படைய முடியாது. களிப்பைப் பெற அதை உண்ணவேண்டும். உண்டால்தான் அது களிப்பைத் தரும். காமமெனும் தேனே, கண்ணுல் காணப்படும் அளவிலேயே மகிழ்வைத் தருவது. கண்ணுலேயே

அதைச் சுவைக்கலாம்.

ஆகவே, சமைக்கப்பட்ட தேன் தன்னே உண்ட வர்க்கே மகிழ்வைத் தருமேயன்றிக் காமத்தைப்போலத் தன்னைக் கண்டார்க்கு மகிழ்வைத்தரும் திறமுடைய தன்று. -

கண்ணளவில் மட்டுமன்று, கருத்தளவிலும் காமஞ் சிறந்தது. *முன்னர்ப் பெற்ற மகிழ்வை கினைத்துப்பார்த்

-ു.* w~^^^^^^-01:15, 31 ஜனவரி 2016 (UTC)~

  • உண்டார்கண் அல்ல தடுநருக்காமம்போல்

கண்டார் மகிழ்செய்த லின்று.

  • உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.