பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 197:

கண்ணம்மா : ஒப்புரவாளன் தன் செல்வத்தைக் கொண்டு ஊருணி போன்ற இன்றியமையாத பொது அமைப்புக்களைச் செய்து உதவுவதும் ஒப்புரவின் செயலே என்பதையும் குறிப்பாக அறிய முடிகிறது.

தந்தை ஆம், மக்காள். ஓர் ஊரில் இன்றியமை யாத ஊருணி மட்டுமோ அமைந்துள்ளது. சுவை தரும் கனி மரங்கள் இல்லையா? அவை தாம் இன்றியமையாத பொருள்கள் அல்ல என்று காய்க்காமல் பழுக்காமல் இருந்து விடுவதில்லை. அவைகளும் துணை உதவிக ளாக மக்களுக்கு அமைவோம் ' என்று காய்க்கின்றன ; பழுக்கின்றன. பழுக்கும் மரங்கள் பயன்பட வேண்டு மால்ை அவற்றின் பழங்கள் பறித்து உண்பதற்குத் தக் கனவாக அமைய வேண்டும். வருந்திப் பறிக்கும் படி யான தடைகள் இல்லாமல் அமைய வேண்டும். பய னுள்ள மரம் ஒருவனுக்கே உரிமை உடையதாகாமல் பொதுவானதாக அமையவேண்டும். அது தொலைவில் கண்ணுக்குப் படாத செறிவில் அமைந்தால் பயனில்லை. ஆகவே, பழுமரம் ஊர் நடுவே பொதுவானதாய்த் தடை யற்றதாய் அமைவதுதான் நலம். ஒப்புரவாளன் இத் தகைய பழுமரத்தைப் போன்றவன் ஆவான். ஒப்புர வாளன் செல்வம் பழுத்த பழம் போன்றது. அவன் அன்பு என்னும் பண்பால் அச் செல்வத்தைப் பொதுமை யாக்கிப் பயன் படச் செய்வான். தன் செல்வம் தக்கார் பிறருக்குப் பயன் படுவதற்கே உள்ளது என்று அறிவிப் பதுபோல் உதவுவான். *ஒப்புரவாளகிைய நல்ல தன்மை உடையவனிடத்துச் செல்வம் அமையுமானல் அச்செல்வம் பய னுள்ள பழங்களைத் தரும் மரம் ஊரின் நடுவே பழுத்ததைப் போன்று தேவைப் பட்டோர்க்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

,,-۔-۔- یہ^.۔م۔م... ہمہ. ہم ایم۔م۔--بس۔یہ ایم۔

  • பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றல், செல்வம்

நயனுடையான்கண் படின்.