பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 199

ஒப்புரவு என்னும் பெருந்தன்மை கொண்டவனிடம் செல் வம் அமையுமானல் அச் செல்வம், தன் உறுப்புக்கள் எல் லாம் மருந்தாக அமைந்து எளிதில் பயன்படத் தவருத மரம் போன்று துன்புற்றவர்க்குப் பயன்படும்.

கண்ணன் தந்தையே, மருந்துமரம் நோய்த் துன்ப மடைந்தவர்க்குத் தன் சிதைவையும் பாராது உதவுவது, அதனை உவமை கூறி விளக்கினமையால் ஒப்புரவு துன்புற்ருேருக்கு உற்ற துணையாய், வருந்தியும் உதவும் தன்மையது என்று அறிகிறேன்.

கண்ணம்மா : மக்களது நோய்த்துன்பம், இடை யூறு முதலியவற்றைப் போக்கும் மருத்துவ நிறுவனங் களே அமைப்பதும் ஒப்புரவின்பால் படும் என்பதையும் குறிப்பாக அறிய முடிகிறது.

தந்தை : இவற்ருல் ஒப்புரவின் விளக்கத்தையும், ஒப்புரவாளரது பெருந்தன்மையான உள்ளத்தையும் உணரலாம். -

கண்ணன் : இத்துணை மேம்பாடுடைய ஒப்புரவை எந்த நிலையிலும் கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்கிறேன் தந்தையே.

மகனே, "ஒப்புரவு என்னும் கடமையை நன்ருக அறிந்து தெளிந்த அறிவினர் தம் வளமான செல்வம் இல் லாத காலத்தும் ஒப்புரவு செய்வதற்குத் தளரமாட்டார்.'

" தந்தையே, தாங்கள் முன்னர்த் தந்துள்ள கருத் துரைகளை ஒன்று கூட்டி நோக்கினல் ஒப்புரவு முதலிய

33వS-మవ>~ --س----

  • மருந்தாகித் தப்பா மரத்தற்ருல், செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

  • இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்.