பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வள்ளுவர் வாழ்த்து

பெருமல் வாழ முடியாத நிலையினர். ஒப்புரவு உலக மக்களது தேவையறிந்து தானே முன்வந்து உதவுவது. ஈகை ஒன்றும் அற்றவர் தன்பால் வந்து இல்லை' என்று இரக்கும்போது உதவுவது. ஒப்புரவில்ை மகிழ்ச்சியைக் காலஞ் செல்லச் செல்லப் பெறலாம். ஈகை அந்நேரத்தி லேயே உவப்பைத் தருவது. ஒப்புரவு செல்வத்தால் மட்டும் செய்யப்படுவது அன்று ; உடல் உதவி போன்ற உதவிகளாலும் அமைவது. ஈகை விரும்பிய பொருளைக் கொடுப்பதால் அமைவது. இவை இரண்டுமே இல்ல றத்தார் கைக்கொள்ள வேண்டியன. ஒப்புரவை எல்லா ரும் மேற்கொண்டு ஒழுகும்போது பிறரது ஒப்புரவால் நீங்களும் பயன்பெற நேரும் ; பெறலாம். ஆளுல் ஈகை பிறருக்குச் செய்யத்தக்க ஒன்றே அன்றிப் பிறரிட மிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அன்று. "எவ் வகை மேலான வழியில் வருவதாக இருந்தாலும் பிறர் ஈய இல்லறத்தார் பெற்றுக் கொள்வது தீமையாகும். ஆனல் பிறர்க்கு ஈவதால், மேம்பட்ட நிலையைத் தரும் உலகம் இல் லாமல் போலுைம் ஈதலே சிறந்ததாகும். ஆகவே, மேலுல கத்திலும் மேம்பட்டது ஈகை. ஈகையால் பெறும் இவ் வுலக மேம்பாடே மேம்பாடு !

இனிய முகம் காணல்

மகனே, பொதுநலத்திற்கு உன் செல்வத்தை ஒதுக்கத் திட்டமிட்டிருப்பதால் அது பயன் கருதாததே ஆகும். ஆகையால் அஃதும் சிறந்ததே. மக்காள், என் கருத்துரைகளைப் பெறும் நீங்கள் அவற்றைக் கொண்டு செலுத்தும் பண்புடையவர்களாக விளங்குவது அறிந்து

  • நல்ல றெனினும் கொளல்தீது ; மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று, -