பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 205

மகிழ்கிறேன். இப்பண்பு உங்களுக்கு இயல்பாக வந் துள்ள குடிப்பண்பால் அமைந்தது. 'யான் ஈவதற்குப் பொருள் இல்லாதவன் -என்று கூறுதல் துன்பம். அந்தத் துன்பத்தைக் கூருமையும், ஈதலும் சிறந்த குடியைச் சேர்ந் தவனிடம் உள்ளனவாகும். நீங்கள் இருவரும் அத்தகைய நல்ல குடியினர். ஆதலால் இல்லை என்னுது ஈகை புரிந்துள்ளீர்கள்.' -

' தந்தையே, இல்லை என்று சொல்லி வருவோ ரது நிலையையும் அவரது மனத் துன்பத்தையும் பார்க்கும் போதும், எண்ணும் போதும் நம் உள்ளம் படும் பாட் டைச் சொல்லால் சொல்ல முடியவில்லையே. அந்நிலை யில் அவர்க்கு இல்லை ' என்று சொல்லவும் மனம் கூடுமோ ? இல்லை என்று இரத்தல் மிகக் கொடு மையே யாகும். அதைவிட இரப்பவரைக் காணும்போது பெறும் உள்ளக் கலக்கம் மிகக் கொடுமையாக ஆகிவிடு கின்றது.'

மகனே, அது உண்மையே. ஆயினும் இல்லை : என்று இல்லாதவர் கூறக் கேட்பதால் உண்டாகும் துன் பம் நிலைத் திருப்பது அன்று. 'இல்லை என்று கேட்டவர் அவர் வேண்டியதைப் பெற்றபின் மலர்கின்ற இனிய முகத் தைக் காணும் வரையில்தான் இரக்கப்படுதல் துன்ப மாகும். அதற்குப் பிறகு அஃதே இன்பமாக மாறி விடும். *

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள. * இன்னு திரக்கப் படுதல், இரந்தவர்

இன்முகம் காணும் அளவு.