பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வள்ளுவர் வாழ்த்து

இல்லறத்தார் முன்னே துறவறத்தார் பின்னே

கண்ணம்மா : தந்தையே, இரப்பவர் விரும்பும் உணவு, உடை, பொருள் முதலிய பலவற்றையும் ஈகைப் பொருள்களாகக் குறிக்கலாம் அல்லவா ?

ஆம், மகளே. ஆயினும், சிறப்பாக உணவிடுதலே மேம்பட்ட ஈகையாகும். பசியைப்போன்று வருத்து கின்ற துன்பம் வேறு ஒன்று இல்லை ; தாழ்த்துகின்ற கொடுமையும் வேறு ஒன்று இல்லை. அத்தகைய கொடிய பசியைப் போக்குதல் இல்லறத்தாருக்கு மிகமிக இன்றி யமையாத முதல் கடமையாகும். அதனுல் அவர் பெறும் பெருமை சாலச் சிறந்தது. அத்தகைய சிறந்த பெருமை துறவறத்தார்க்கும் அமைவதில்லை. "துறவறத்தாரது ஆற்றல் தமக்கு ஏற்படும் பசியைப் பொறுத்துக் கொள்வ தாகும். அந்த ஆற்றலும் பிறர் பசியை உணவு கொடுத் துப் போக்குகின்ற இல்லறத்தாரது ஆற்றலுக்குப் பிற் பட்டதேயாகும்.'

கண்ணன் ஆம், துறவறத்தார் தம் பசியைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவரே யன்றிப் பிறர் பசியைப் போக்கும் செயல் கொள்பவர் அல்லர்.

கண்ணம்மா இல்லறத்தாரோ தம் பசியையும் அடக்க வேண்டுவதில்லை. அடக்காமலே பிறர் பசியை யும் போக்குபவர்.

கண்ணன்: ஆகையால், பசியைப் போக்குதலாகிய ஈகை துறவறத்தார் ஆற்றலைவிடச் சிறந்து நிற்கும் பெருமையைப் பெறத் தகுதியுள்ளதாகின்றது.

ఫెషిషి:

米 இந்துவர் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். -