பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 207 - வள்ளுவர் வாழ்த்து مبد

வறிஞன் வயிறே

வளமான பெட்டகம்

மக்காள், அதுமட்டுமோ ! பசியைப் போக்குவதால் தம் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வளமான பெட்ட கத்தையும் பெறலாம். ஒன்றும் அற்ற வறியவர்களைப் பசி பிடித்தால் அவர்களை மேலும் மேலும் கலக்கும் கரைக்கும் ; அழிக்கவும் அழிக்கும். இவ்வாறு அழிவைச் செய்யும் பசியை அழிபசி என்று சொல்லலாம். அதனைத் தீர்த்துவைக்கக் கொடுக்கப்படும் பொருளோ வீண் செல வுப் பொருள் அன்று. அது அழிபசியை அழிப்பது. பசியைப் பெற்றவனது வயிறு அதல்ை நிறையும். வயிறு நிறைந்தால் உள்ளம் நிறையும். உள்ளம் நிறைந்தால் முகம் மலரும். அம்மலர்ச்சியைக் கண்டால் பொருளைக் கொடுத்தவரது உள்ளம் உவக்கும். செல்வம் என்பது உவப்பைத் தருவதற்குத் தானே பயன்பட வேண்டும் ? வீணே சேமித்து வைக்கப்படும் செல்வம் இந்த உவப் பைத் தருமோ ?”

கண்ணன் தராது தந்தையே.

ஆகவே, செல்வத்தைப் பேழையிலே நிறைக்கா மல் பசித்தவன் வயிற்றிலே உணவாக நிறைத்து வைப் பதே உவகை தரும் சேமிப்பு ஆகும். ஆகையால்: *வறுமை பெற்ருேரது அழிபசியைத் தீர்த்து வைத்தல் வேண்டும். அ.தே செல்வம் பெற்ற ஒருவன் தன் செல் வத்தை வைக்கும் சேமிப்பு இடமாகும்.

  • அற்றர் அழிபசி தீர்த்தல் அதொருவன்

பெற்றன் பொருள்வைப் புழி.