உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 208 வள்ளுவர் வாழ்த்து

கண்ணன் : செலவு செய்வதே சேமிப்பாக அமை வதும் ஒரு வியப்புத்தான்.

கண்ணம்மா : வறியவன் வயிறே செல்வத்தைச் சேமித்து வைக்கும் வளமான பெட்டகம் ஆவது வியப் பினும் வியப்பு.

கண்ணன் : ஆகவே, வியப்பான சிறப்பையும் ஈகை தருவதாகிறது.

தீப்பசி போக்கிளுல் தீப்பிணி தீண்டாது

மக்காள், இவை மட்டுமோ பசியைப் போக்குபவ. னைப் பசி நெருங்காது. இல்லறத்தான் இயல்பாகவே பகுத்துக் கொடுத்து உண்பவன். அவன் இல்லை : என்று பிறர் தன்பால் வரும்போது தனியாக உண் பானே ? அவரை இன்முகங்காட்டி இன்சொற் கூறி அமரச் செய்து அவர் இன்முகம் காட்டும் வரை உண்டி கொடுத்து உதவி, அதனுல் உள்ளம் நிறைந்து மகிழ் பவன் ஆவான். அந்த மகிழ்ச்சியின்போது இவனுக்குப் பசியும் வருமோ ? உள்ள நிறைவு தோன்றிவிட்டால் எல்லா நிறைவும் நிலைத்துவிடுவது மக்கட்கு இயல்பு. எல்லா நிறைவும் நிலைக்கும்போது பசி என்னும் குறைவு தென்படுமோ என்ன ? ஆகையால், பசி என்று வந்த வருக்குத் தம் உணவைப் பகுத்துக்கொடுத்து உண்ணும் இயல்பைப் பொருந்தியவனைப் பசி என்னும் தீய பிணி தீண்டுதல் இல்லை.”

వSSస:సిన<sపా:SS>SS
  • பாத்துண் மரீஇ யவனப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.