பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 209

கண்ணன் பிறரது பசியைப் போக்குவதால் தன் பசியைக் காணுமல் செய்யும் வியத்தகு செயலைச் செய் கிறது | 65}& . - -

கண்ணம்மா : பிறரது தீய பிணியைப் போக்கும் மருத்துவன் தன்பால் தீய பிணியை அண்டவோ விடு வான்? அதனுல்தான், பசிப்பிணியைப் போக்குபவனை அத்திய பிணி தீண்டவும் அஞ்சுகிறது.

கண்ணன் : தீண்டல் என்ற சொல்லமைப்பால் பசி நச்சரவம் போன்ற கொடியது என்ற குறிப்பும் தென்படு கிறது.

இன்பத்தை அறியாதவர்

கண்ணன் தந்தையே, இல்லை என்று இரப் போர்க்குச் சிலர் தம்பால் பொருளை வைத்துக்கொண்டே இல்லை என்கின்றனர்; மேலும் பொருளைச் சேமிக்கின் றனர். இறுதியில் அப்பொருளால் பயனடையாமலே இழக்கவும் இழக்கின்றனரே, ஏன்? -

மகனே, "பொருளேச் சேர்த்து வைத்து இறுதியில் இழந்துவிடும் அருளற்றவர் எளியோருக்குக் கொடுத்து அதல்ை உவப்படையும் இன்பத்தை அறியாதவர் போலும்: அத்தகையவர் செல்வச் சேமிப்பிலேயே கருத்துடைய வர். சேமித்து நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினர். நிரப்புவதற்காக எவருக்கும் எத்துணை சிறிதும் ஈய மாட்டார். தாமே உண்ண வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பார். அத்தகையவர்

AASAASAASAASAASAASAASAASAASAAAS iMMiBBBBS

  • ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர்.