பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 2 í 1.

"ஆம், “சாதலைவிடத் துன்பமானது வேறு ஒன்றும் இல்லை. ஆனால், வறியவர் விரும்பிய பொருளைக் கொடுக்க இயலாத இழிந்த நிலையில் அந்தச் சாதலும் இனியதே ஆகும்.'

கண்ணன் : தந்தையே, முன்னரும் புறங்கூறி வாழ்வதைவிடச் சாதல் ஆக்கத்தைத் தரும் என்றமை யும் இங்கு நினைவிற்கு வருகிறது. இல்லறம் என்ருல் இல்லாதவர்க்கு ஈய வேண்டும். இல்லாது போளுல் இறப்பதே மேல் என்ற முடிந்த முடிபான நிலையை உணர்கிருேம். அந்த நிலை ஏற்படாதபடி முயற்சி யோடு வாழ்வோம்.

மகனே, அந்த வாழ்வுதான் இல்லறத்தின் மணி முடியாகிய பயனைப் பெறும்.'

கண்ணம்மா : இல்லறத்தின் மணிமுடியாவது எது

தந்தையே ?

தந்தை : மகளே, மகனே ; அது அத்துணை எளி தான தன்று. ஒரு நாளில் பெற்று விடுவதன்று. இருப் பினும் நாளை விளக்குவேன்.

  • சாதலின் இன்ஞத தில்லை; இனிதது உம் ஈதல் இயையாக் கடை. -