பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 213.

தந்தை : ஒருயிராய் வாழும் உங்களுக்கு ஒரு முடி ப்ோதுமானதே. நீங்கள் விரும்பினுலும் இரண்டு முடிகள் கிட்டா. ஏனென்ருல் அம்முடி பொன்னல் செய்து வைரமும் மணியும் பதிக்கப்பட்டு முத்து தொங்க விடப்பட்டுச் செய்யப்படுவது அன்று. ஈகையால் உருப் பெற்று ஒப்புரவு, நல்லொழுக்கமும், அறம் முதலியவற். ருல் அழகு செய்யப்படும் புகழ் என்னும் முடியாகும் அது. ஆகையால் அதனைத் தலையில் சூட முடியாது. உயிருக்குத்தான் அது உகந்தது ; சிறந்தது. அதனை நீங்கள் பெறத் தகுதி பெற்றவர்கள். 'இல்லாதவர்க்கு ஈதலால் புகழ் உண்டாகுமாறு வாழ்தல் வேண்டும். அங் தப் புகழ் அல்லாது உயிருக்கு வேறு ஒரு ஊதியம் இல்லை. இந்தப் புகழே இல்லறத்தின் மணிமுடியாகும். மக்காள் அதனைப் பெறுக !

கண்ணன் தந்தையே, இல்லறத்தின் முடித்த முடிபான பயன் புகழ் பெறுதல் தான் என்ருகிறது.

கண்ணம்மா : அந்தப் புகழை அடையும் வழி ஈதலே என்று அறிவித்து அதனை எங்களுக்கு எளிதாக்கி யிருக்கிறீர்கள், தந்தையே

மகளே, எளிதாகத் தோன்றிலுைம் அது சிறந்: ததே. *உலகத்தில் நன்னெறிகளை உரைக்கும் சான்றேர் சிறப்பித்து உரைப்பன எல்லாம் இல்லே ' என்று இரப் போர்க்கு ஈபவர்மேல் நிலைக்கின்ற புகழையேயாகும்.

  • ஈதல் இசைபட வாழ்தல் ; அதுவல்ல

தூதியம் இல்லை உயிர்க்கு. . . . .” * உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கொன்:

lவார்மேல் கிற்கும் புகழ்.