பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 217

ஆகவே, "இல்லறத்துறையில் முனைந்து வெளிப்படுவதா ல்ை புகழோடு வெளிப்பட வேண்டும். அந்தப் புகழுக்குரிய செயல் இல்லாதவர் இல்லறத்தாராய்த் தோன்றுவதை விட வெளிப்படாதிருப்பதே நன்று. அவ்வாறன்றி வீனுக்கு வெளிப்படுவதால் என்ன கிட்டும் ? அவனைச் சான்ருேர் புகழ்ந்தா உரைப்பர் ?"

கண்ணன் : இல்லை, தந்தையே. புகழ்ச்சிக்கு மாறுபாடான இகழ்ச்சியையே பெறுவர்.

"ஆம், சிலர் இவ்வாறு இகழ்ச்சியையே பெறுவ துண்டு. அத்தகையவர் தம்மை இகழ்பவரை வெறுத் துப்பேசி நோகச் செய்வதும் உண்டு. அது மக்கள் தன்மையன்று. தாம் பெற்ற இகழ்ச்சியால் அவர் உணரத்தக்கது ஒன்று உண்டு. தாம் ஏன் இகழ்ச்சி யைப் பெற்ருேம் என்று எண்ணி உணர்வதே அது. அவ்வாறு உணர்வதால் தாம் செய்த தவறுகளை உணர லாம். உணர்ந்தால் தமக்குத் தானே நொந்து கொள்ள வேண்டும். அந்நோவால் மீண்டும் தவற்றைச் செய்யா மல் நீக்கி நல்லன செய்து புகழ்பெற்று வாழ முனைய லாம். இவ்வாறு *புகழ் உண்டாகுமாறு வாழ முனையாத வர் தம் முடியாமைக்குத் தம்மைத்தாமே நொந்து கொள்ளா தவராய்த் தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது ஏனே ?”

--محم۔م۔م۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ایسی ہم تحتی میت- سیم مسیه

  • தோன்றிற் புகழொடு தோன்றுக! அ.திலார்

தோன்றலின் தோன்ருமை நன்று.

  • புகழ்பட வாழாதார் தம்நோவார், தம்மை

இகழ்வாரை நோவ தெவன்?

வ. வா-14.