பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 வள்ளுவர் வாழ்த்து

வையத்தார்க்கு எல்லாம் வசை

மக்காள், அத்தகையவர் இல்லறத்தின் உண் மைப் பயனை அறியாதவர்கள். எப்பயன் அழிந்தாலும் புகழ்ப் பயன் அழியாதது என்பதை மறந்தவர்கள். மக்களது வாழ்நாளுக்குப் பின் எஞ்சி நிற்பது புகழ் அல்லது பழியன்ருே !’

கண்ணன் ஆம், தந்தையே. ஒருவரது தகுதி யும், தகுதியின் மையும் அவர்க்குப்பின் எஞ்சும் புகழாலும் பழியாலும் அறியப்படும் என்று முன்னரும் குறித்துள்

வரீர்கள்.

தந்தை அத்தகைய எச்சமாகிய புகழும், பழியும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. புகழ் அமைந்தால் பழி வராது ; பழி வந்தால் புகழ் அமையாது. இல்லற வாழ்வினர் புகழ் பெருது போல்ை அஃது இல்லறத் திற்கே இழுக்காகும். அத்தகையோரால் இல்லறம் பழி யைப் பெறுவதால் இல்லறத்தார் யாவருமே பழிக்குரிய வராகக் கருதப்படவும் கூடும். ஆகவே, மக்களது வாழ்விற்குப் பின்னே எஞ்சி நிற்பதாகிய புகழ் என்னும் எச்சத்தைப் பெருது விட்டால், அது வையத்து வாழும் இல்லற மாந்தர்க் கெல்லாம் பழி என்பர் சான்ருேர்.

கண்ணம்மா : ஒருவர் தாம் செய்யும் தவற்ருல் இல்லறப் பகுதிக்கே இழிவைத் தந்தவராகிருர்,

கண்ணன் ஆம் இல்லறத்தார் பழியைப் பெற்ருர் என்று பொதுவாகத்தானே பேசப்படும். அப்பேச்சு

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

ごごーごー :S:

  • வசைமென்பவையத்தார்க் கெல்லாம், இசையென்னும்

எச்சம் பெரு அ விடின்.