220 வள்ளுவர் வாழ்த்து
கண்ணம்மா : புகழ் இல்லாத இல்லறத்தார் நிலத் துக்கும் கேடு தந்தவர் ஆவார்.
கண்ணன் : கண்ணம்மா புகழ் இல்லாதவரை உயி
ரும் உடலும் இணைந்தவராகக் கூருது. உடலைத் தாங்
கும் நிலம் ' என்று உயிரற்றவராகவே தந்தையவர்கள் குறித்ததை நோக்கியைா ?
கண்ணம்மா : ஆம், அவன் உடலும் மண்ணுக்குக் கேடு என்ற குறிப்பு அதிலுள்ளது. வாழும்போது மட்டு மன்று, இறந்த பின்னரும் அவன் உடலும் கேடு தரும் என்ற கருத்தும் பொருந்தியுளது. உடல் மண்ணில் மக்கினுல் உரம் ஆகும் என்பர். சிற்று ர்களில் ' நாயை அடித்து நாரத்தைக்குப் போட்டால் நல்ல உரம் ஆகும் : நன்ருகக் காய்க்கும் என்பர். புகழ் பெருதவன் உடலோ உரத்திற்கும் பயன்படாமல் நாயினும் கீழாய் கேட்டுக்கே பயன்படும் என்பதை எண்ணும்போது நகைப்புதான் தோன்றுகிறது. அஃதொடு புகழ் பெருதவன் ஈகை. ஒப்புரவு முதலிய இல்லறப் பண்புகள் இல்லாதவன். ஒப்புரவை அறியாதவன் செத்தாருள் வைக்கப்படுவான் என்று முன்னர் தந்தையவர்கள் குறித்தமையும் இங்கே பொருந்துகிறது.
கண்ணன் தந்தையவர்கள் அன்பை விளக்கும் போதும் உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு அன் பால் அமைவதாகும் என்ருர்கள். அன்பை உள்ளத்தில் பெருத வாழ்க்கை உயிர் பெருத பட்ட மரம் என்ருர்கள். அன்பின்வழிச் செல்வதுதான் உயிர்நிலை என்ருர்கள். அத்தகைய அன்பில்லாதவர் தானே ஒப்புரவு கொள் ளார் ; ஈகை செய்யார் ; இகழ்ச்சியையும் பெறுவார். அவர் உயிரற்ற வெற்றுடல் போன்றவர்தானே !