பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 22重

உண்மை வாழ்க்கை wo

மக்காள், நீங்கள் பெற்றுள்ள உள்ளத்தெளிவை எண்ணி மகிழ்கிறேன். நீங்கள் இதுபோது நினைவு படுத்திக் கொண்டதற்கு ஏற்ப, முடிந்த முடியாகப் புகழற்றவர் உயிர் வாழ்க்கை அற்றவர் என்றே கூறிவிட லாம். ஆகையால், 'தம் இல்லற வாழ்வில் புகழ் இன்றி வாழ்பவரே உண்மை வாழ்க்கை வாழாதவர் ஆவார். பழி இன்றி வாழ்பவரே உண்மை வாழ்க்கை வாழ்பவ ராவார். -

மக்காள், புகழுக்குரிய பண்புகளை எல்லாம் அறிந் துள்ளிர்கள். அறிந்து தெளிவு பெற்றுள்ளிர்கள். தெளி வொடு செயலாற்றும் உள்ள உரமும் கொண்டுள்ளிர் கள். இவைகளே வாழ்வாங்கு வாழும் வகை. இவ் வகையைப் பெற்றுள்ள நீங்கள் வானுறையும் தெய்வங் கள் அன்ருே !!-என்ருர் வள்ளுவத் தந்தையார்.

அமர்ந்திருந்த பெண் தெய்வம் அண்மையிலிருந்த ஆண் தெய்வத்தைத் தொழுதது. ஆண் தெய்வம் அருந் தெய்வமாம் வள்ளுவத் தந்தையைத் தொழுதது. பெண் தெய்வமும் இணைந்து தொழுதது.

ஆண் தெய்வம் பேசவும் தொடங்கிற்று : தந் தையே, தங்கள் அறிவுரைகளாலும், வாழ்த்தாலும் எல் லாத் தகுதிகளும் பெறுவோம். எங்கள் மேல் இத் துணைப் பரிவு கொண்டு பேருரைகளை நல்கியமை எங் களைப் பெறும் பேறு பெற்றவர்களாக ஆக்கியுள்ளது.

SAASAASAASAASAAMAMSAMAeeeS اہتمہت بہت مہی۔ب۔۔۔۔۔۔-ہ۔- ہا۔ یہ"

  • வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர். -