பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேடைத் தமிழ்,

இயற்றமிழில் ஒரு புதிய தோற்றம்.

கவிஞர் கோவை. இளஞ்சேரனுரின் புதுமைப் படைப்பு.

முறையோடு கூட்டத்தை இயக்க -

துறைதோறும் சொற்பொழிவாற்ற -

நிறைவாகச் சுவைக்க -

வகை கூட்டும் முதன்மை நூல்.

பலவகைக் கூட்டங்களை அமைத்து மேடையை இயக்கும் ஆட்சித் திறனுக்கு இலக்கணம் வகுக்கும் இயக்கப் பால், பலமுனைச் சொற்பொழிவுகட்குச் செப்பங் காட்டி இலக்கணங் கூட்டும் பொழிவுப் பால், கேட்போர் சுவைஞராய்த் திகழ்தற்குரிய அமைதி யையும், நிகழ்ச்சியால் விளையும் பயனையும் வகுக்கும் விளைவுப் பால் என முப்பால்களைக் கொண்ட நூல்.

இனிய உரைநடையில் விரிவுரையான கருத்து விளக்கம் பெற்று, அவ்வக்கருத்தின் ஈற்றீற்றில் ஒவ் வொரு நூற்பாவாக 300 சிந்தியல் வெண்பாக்களால் ஆகிய புதுமை நூலாக

விரைவில் வெளிவர உள்ளது.