பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வள்ளுவர் வாழ்த்து

காவடியும் காமமும்

இன்பத் தென்றலிலே திளைத்துக் கொண்டிருந்த அவர்கள் தம் உணர்விற்கு வந்தனர். அவன் எதையோ அறிய அவாக் கொண்டான்; உடல், உள்ளம், உரை யாவற்றையும் செப்பஞ்செய்து கொண்டான்; பேசிளுன் :

தந்தையே காமத்தின் பக்குவம் அறிந்து இன்பம் காண்பவர்கள் சிலரே என்றீர்கள். வாழ்வின் குறிக் கோளும் பயனும் இன்பமேயாகும். வாழ்வில் இன்பமே பெறுதல் வேண்டும் என்பதில் எவரும் மாறிநிற்பதில்லை. வாழ்வில் புகும் எல்லாருமே இன்பம் பெறுதல் வேண்டு மென்றே விரும்புகின்றனர். இவ்வாறிருக்கச் சிலரே அவ்வின்பத்தைப் பெற்றுப் பலர் பெருது போவதேன்? உங்கள் வாழ்த்தால் அச்சிலருள் புக இருக்கும் நாங்கள் அதற்குரிய விளக்கத்தைப் பெற விரும்புகின்ருேம். எங்கள் வாழ்விற்கு உங்கள் பொன்னுரை நல்ல வழி காட்டியாக அமையும். அந்தப் பலர் செய்த தவறென்ன? சிலர் கைக்கொண்ட நெறி யாது ?"

மகனே, வினவ வேண்டியதை வினவினுய். நீவிர் வாழ்க! குமரா, ஒரு பெரும் சுமைக்கட்டு இருப்பதாக வைத்துக்கொள். அதைத் துன்பமின்றிச் சுமந்து செல்ல என்ன செய்யலாம் ?'

" தலையில் சுமக்கக் கூடிய எளிமை உடையதாகுல் தலையால் சுமக்கலாம். அல்லது தோளில் சுமக்கக்கூடிய தால்ை பொதுமக்கள் பயன்படுத்தும் காவடி" என்னும் 'கா' வைப் பயன்படுத்தலாம். சுமை பகிரக்கூடியதாக இருப்பின் அதை இரு சமபங்காகப் பகிர்தல் வேண்டும் பின் காவின் இரு பக்கங்களிலும் அவற்றை இட்டு: